Contact Information

Digital Content Private Limited
No 96/8, Kottanuwatta Road, Nugegoda, Sri Lanka

News@citizen.lk
Tel: 0112810532


 
ஆர்ப்பாட்டமொன்றின்போது கண் பார்வையை இழந்த யுத்த வீரர்  10 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் முடிவுசெய்துள்ளது.

மாத்தறை பகுதியைச் சேர்ந்த நிஷாந்த மிஹிராஜ் என்பவரே இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவினை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2017 நவம்பர் 7 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர் புகை தாக்குதலினால் தான் கண் பார்வையை இழந்ததாகவும் குறித்த நபர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மனு இன்று காலை நீதிபதிகளான பிரியந்த ஜெயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் யசந்த கொட்டேகொட ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போதே மனு மீதூன விசாரணையை 2021 மே 4 ஆம் திகதி மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

Recent Stories