Contact Information

Digital Content Private Limited
No 96/8, Kottanuwatta Road, Nugegoda, Sri Lanka

News@citizen.lk
Tel: 0112810532



 அமெரிக்கா, கனடா மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த பலருக்கு, தபால் மூலம், மர்ம விதைகள் அடங்கிய, 'பார்சல்' அனுப்பப்பட்டு வருகிறது. 

அந்த தபால், சீனாவில் இருந்து அனுப்பப்பட்டதாக குறிப்புகள் உள்ளன.

'அந்த மர்ம விதைகளை யாரும், நிலத்தில் பயிரிட வேண்டாம்; எனவும் அது விவசாயத்தை அழிக்கும் உயிரி ஆயுதமாக இருக்கலாம்' என, கனடா எச்சரித்துள்ளது.

கொரோனா தொற்று அமெரிக்காவில் பரவியதை தொடர்ந்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் சீனாவுக்கு எதிரான அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றார்.

இந்த பின்னணியில் தற்போது தபாலில் வரும் மர்ம விதைகள் அடங்கிய பார்சல்கள், தற்போது அமெரிக்காவில் அச்ச நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அலபாமா, கொலராடோ, ப்ளோரிடா, லோவா, கன்சாஸ், ஜோர்ஜியா, டெக்சாஸ் உள்ளிட்ட, 28 மாகாணங்களை சேர்ந்த பலருக்கு, கடந்த சில நாட்களாக மர்ம பார்சல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதற்குள் சிறிய, 'ப்ளாஸ்டிக்' பையில் அடைக்கப்பட்ட விதைகள் இருக்கின்றன. 'அந்த பார்சல், தெரிந்தவர்களிடம் இருந்தோ, அல்லது இணையத்தள வர்த்தக நிறுவனங்களிடம் இருந்தோ வரவில்லை' என, அதை பெற்றவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அந்த பார்சலில், சீன எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

சில பார்சல்களில், 'உள்ளே தங்க ஆபரணங்கள் உள்ளன என, வெளிப்பக்கம் குறிப்பிடப்படுகிறது.

ஆனால் உள்ளே பிரித்துப் பார்த்தால், விதைகள் மாத்திரமே காணப்படுகினற்ன.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறிப்பாக கனடாவில், பண்ணை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பலருக்கு, இந்த பார்சல் அனுப்பப்பட்டுள்ளது.  

ஆனால் இது குறித்து மறுப்பு தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சகமானது, தபால் மூலம் விதைகளை அனுப்ப, சீன நாட்டு தபால் துறை அனுமதிக்காது.

 அந்த பார்சல்களின் மேல் உள்ள சீன தபால் முத்திரைகள் போலியானவை என, எங்கள் தபால் துறை தெரிவித்துள்ளது. அந்த பார்சல்களை எங்களுக்கு அனுப்பி வைத்தால், விரிவாக ஆய்வு செய்து, விபரங்களை தெரிவிப்போம் என சீனா தெரிவித்துள்ளது.

Recent Stories