Contact Information

Digital Content Private Limited
No 96/8, Kottanuwatta Road, Nugegoda, Sri Lanka

கொரோனா வைரல் அச்சுறுத்தல் பரவிவரும் நிலையில், தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கும் என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை தொடங்கும் தொடருக்கு, திட்டமிட்டபடியே ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்க அணி இந்தியா செல்கிறது.

அவர்கள் வெளியிட்ட அந்த அறிக்கையில், “எங்கள் வீரர்கள் மற்றும் ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு மற்றும் கவனிப்பின் கடமையை உறுதி செய்வதற்காக சிஎஸ்ஏ ஒரு முறையான பணியில் ஈடுபட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு உட்பட பல்வேறு சர்வதேச நிபுணர்களின் தகவல்களைப் பயன்படுத்தியதாகவும், இந்தியாவில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மற்றும் இந்தியாவில் உள்ள தென்னாப்பிரிக்கத் தூதரகம் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்ததாகவும் சிஎஸ்ஏ தெரிவித்துள்ளது.

“தென்னாப்பிரிக்க வீரர்கள், துபாய் வழியாக இந்தியாவுக்குச் சென்று டெல்லியில் தரையிறங்கி, அங்கு ஒரு நாள் செலவழிப்பார்கள், பின்னர் தர்மசாலா, லக்னோ மற்றும் கொல்கத்தாவில் விளையாடுவார்கள்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “விளையாடும் இடங்கள் எதுவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகப் பதிவு செய்யவில்லை, இந்த நகரங்களுக்கிடையேயான விமானங்கள் மூலம் பயணம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் வழியாக ஆபத்தை மேலும் குறைக்கலாம். துபாய் மற்றும் டெல்லியில் உள்ள அபாயங்கள் குறைவாகக் கருதப்படுகின்றன."

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்த குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், சிஎஸ்ஏ தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் ஷூயிப் மஞ்ச்ராவும் இந்தியா செல்லவுள்ளார்.

Recent Stories