Contact Information

Digital Content Private Limited
No 96/8, Kottanuwatta Road, Nugegoda, Sri Lanka

இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 25 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியானது, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் தொடரை இழந்தது.

இந்த நிலையில் பலேகேல மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். ஆரம்ப வீரராக களமிறங்கிய சிம்மன்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்களைக் குவித்தார்.

20 ஓவர் முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இதனையடுத்து 195 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் குசல் பெரேரா 66 (38 பந்துகளில்) மற்றும் வனிண்டு ஹசரங்கா 44 (34 பந்துகளில்) தவிர மற்ற வீரர்கள் அனைவருமே சோபிக்க தவறியதால் அந்த அணி 171 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிகபட்சமாக ஓஷேன் தோமஸ் மூன்று ஓவர்களில் 28 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.

ரோவ்மன் பவல் 2 விக்கெட்டுகளையும், ஷெல்டன் கோட்ரெல், ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.

இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணியானது 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

Recent Stories