Contact Information

Digital Content Private Limited
No 96/8, Kottanuwatta Road, Nugegoda, Sri Lanka

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் ஜோஷியை இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக பிசிசிஐ புதன்கிழமை அறிவித்தது. மதன் லால், ருத்ரா பிரதாப் சிங் மற்றும் சுலக்ஷான நாயக் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) புதன்கிழமை மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் கூடி அகில இந்திய மூத்த தேர்வுக் குழுவின் (ஆண்கள்) புதிய உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட்டது. மூத்த தேர்வுக் குழுவில் சுனில் ஜோஷி மற்றும் ஹர்விந்தர் சிங் பெயர்களை சிஏசி பரிந்துரைத்தது. தேர்வுக் குழுவில், இந்த ஆண்டு இறுதியில் பதவிக்காலம் முடிக்கும் தேவங் காந்தி, சரந்தீப் சிங் மற்றும் ஜடின் பரஞ்சபே ஆகியோருடன் சுனில் ஜோஷி மற்றும் ஹர்விந்தர் இணைகிறார்கள். 

மூத்த ஆண்கள் தேர்வுக் குழுவின் தலைவராக சுனில் ஜோஷி இருக்க வேண்டும் என்றும் சிஏசி பரிந்துரைத்துள்ளது.

ஒரு ஊடக அறிக்கையின்படி, சிஏசி ஒரு வருட காலத்திற்குப் பிறகு, வேட்பாளர்களை மதிப்பாய்வு செய்து பிசிசிஐக்கு பரிந்துரைகளை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

“மூத்த ஆண்கள் தேர்வுக் குழுவின் தலைவராக சுனில் ஜோஷியை குழு பரிந்துரைத்தது. சிஏசி ஒரு வருட காலத்திற்குப் பிறகு வேட்பாளர்களை மதிப்பாய்வு செய்து பிசிசிஐக்கு பரிந்துரைகளை வழங்கும்” என்று பிசிசிஐ செயலாளர் ஜே ஷாவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.

தென் மண்டல பிரதிநிதி எம்.எஸ்.கே.பிரசாத்துக்கு பதிலாக சுனில் ஜோஷி நியமிக்கப்பட்டார். ஹர்விந்தர் சிங் மத்திய மண்டலத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், அவர் ககன் கோடாவுக்கு பதிலாக குழுவில் நியமிக்கப்பட்டார்.

பரிந்துரைகளை அறிவிக்கும் போது, ​​சிஏசி உறுப்பினர் மதன் லால் செய்தியாளர்களிடம் “நாங்கள் பதவிக்கு சிறந்தவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம்” என்று கூறினார்.

புதிய தேர்வுக் குழு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான எதிர்வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடருக்கான இந்திய அணியைத் தேர்ந்தெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தர்மசாலாவில் உள்ள ஹெச்பிசிஏ மைதானத்தில் மார்ச் 12ம் தேதி முதல் ஒருநாள் போட்டி நடக்கவுள்ளது. அதைத் தொடர்ந்து லக்னோ மற்றும் கொல்கத்தாவில் முறையே மார்ச் 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் அடுத்த இரண்டு போட்டிகள் நடைபெறும்.

Recent Stories